search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்யுத்த வீரர்"

    ‘தி கிரேட் காளி’ என அழைக்கப்படுபவர் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் தலிப் சிங் ரானா பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக தேர்தல் கமிஷனிடம் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. #Trinamool #ElectionCommission #TheGreatKhali #BJP
    கொல்கத்தா:

    ‘தி கிரேட் காளி’ என அழைக்கப்படுபவர் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் தலிப் சிங் ரானா. தற்போது இவர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று, அங்கு வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் இங்கு வந்து பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். இதற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் செய்துள்ளது.

    அதில், “தி கிரேட் காளி அமெரிக்க குடியுரிமை பெற்றிருக்கிறார். அவரது பிரபலத்தை பயன்படுத்தி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாரதீய ஜனதா கட்சி முயற்சிக்கிறது. இந்தியாவில் யார் ஒரு பொருத்தமான எம்.பி.யாக இருக்க முடியும் என்பது பற்றி முழுமையாக தெரியாத ஒருவர் இந்திய வாக்காளர்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்துதற்கு அனுமதிக்க கூடாது” என கூறப்பட்டுள்ளது.

    இந்த புகார், மேற்கு வங்காள மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஏப்ரல் 26-ந் தேதி, ஜாதவ்பூர் தொகுதி பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் அனுபம் ஹஸ்ராவுடன் தி கிரேட் காளியும் சேர்ந்து பிரசாரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தி கிரேட் காளி அளித்த பேட்டியில், “என்னை எப்போது அழைத்தாலும் நான் வருவேன். அமெரிக்காவில் இருந்து என் தம்பிக்கு ஆதரவு தர வந்துள்ளேன். உங்கள் ஓட்டுகளை வீணடிக்காதீர்கள். அனுபம், படித்தவர். உங்கள் கஷ்டங்கள் தெரிந்தவர். மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக பணியாற்றக்கூடியவர்” என குறிப்பிட்டுள்ளார்.  #Trinamool #ElectionCommission #TheGreatKhali #BJP 
    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக புகாரில் சிக்கிய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் உதவி போலீஸ் கமிஷனர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். #NarsinghYadav
    மும்பை :

    2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற உத்தரபிரதேசத்தை சேர்ந்த மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ். இவர் மும்பை போலீசில் ஆயுதப்படை உதவி கமிஷனராக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் மும்பை வடமேற்கு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் நிருபம் பிரசாரம் செய்தபோது, அவருடன் பிரசார மேடையில் இருந்து உள்ளார்.

    விதிமுறைகளை மீறி போலீஸ் அதிகாரி ஒருவர் அரசியல் கட்சி வேட்பாளருடன் பிரசார மேடையில் தோன்றியது சர்ச்சையை உண்டாக்கியது.

    இது தொடர்பாக நர்சிங் யாதவ் மீது அம்போலி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்தநிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக புகாரில் சிக்கிய நர்சிங் யாதவ் அதிரடியாக உதவி போலீஸ் கமிஷனர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்த நடவடிக்கையை மராட்டிய அரசு எடுத்துள்ளது. #NarsinghYadav
    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா தான்டா வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். #Wrestling #PoojaDhanda

    புடாபெஸ்ட்:

    உலக மல்யுத்த சாம்பியன் ஷிப் போட்டி ஹங்கேரி புடாபெஸ்டில் நடந்து வருகிறது.

    இதன் பெண்களுக்கான 57 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீராங்கனை பூஜாதன்டா- 2017-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியனான கிரேஸ் ஜேக்கப் புல்லன் மோதினர்.

    இதில் பூஜாதன்டா 10-7 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார். இது இந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் 2-வது பதக்கமாகும். இதற்கு முன்பு ஆண்கள் பிரிவில் பஜ்ரங் புனியா வெள்ளி பதக்கம் வென்று இருந்தார்.


    உலக சாம்பியன் ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 4-வது இந்திய வீராங்கனை பூஜாதன்டா ஆவார். இதற்கு முன்பு அல்காதோமர் (2006), கீதா (2012), பபிதா போகத் (2012) ஆகியோர் வெண்கல பதக்கம் வென்று இருந்தனர். #Wrestling #PoojaDhanda

    ×